• 7 years ago
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நாயகன் நாயகியாக நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நாளை வெளிவரவுள்ளது. இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருக்க, நேற்று இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஒன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், ரசிகர்களின் காலில் விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் நடிகர் சூர்யா. சூர்யா தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். பெண்கள், சிறுவர்கள் மத்தியிலும் சூர்யாவின் படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும். இவர் நடிப்பில் நாளை 'தானா சேர்ந்த கூட்டம்' படம் திரைக்கு வரவுள்ளது. 'தானா சேர்ந்த கூட்டம்' ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு வருகிறார் சூர்யா. கேரளாவிலும் அவருக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் கொச்சினில் நடைபெற்ற பட ப்ரொமோஷன் நிகழ்விலும் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் டான்ஸ் ஆடினார். 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் பொங்கல் ரிலீஸாக வருவதால் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளார் சூர்யா. பொதுவாக, முதல் நாள் தான் நடிக்கும் படங்களை அச்சத்தால் பார்க்க விரும்பாத சூர்யா, 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை முதல் நாளே திரையரங்கில் பார்க்க இருக்கிறாராம்.

Surya met his fans during thana sendha koottam press meet. when fans started falling on surya's feet.., he fell on the fans feet as well. everyone was stunned with his actions and cant get enough of praising what a gentleman and grounded person he is. the video of him falling on his fans feet have gone viral.

Category

🗞
News

Recommended