• 7 years ago
90 எம்.எல். படத்தில் ஓவியா ஓரினச்சேர்க்கையாளராக நடிக்கிறார் என்று ஒரு தகவல் தீயாக பரவியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து ஓவியா கோலிவுட்டின் பிசியான நடிகையாகிவிட்டார். ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4, களவாணி 2 ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் அவர் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அனிதா உதீப் இயக்கும் 90 எம்.எல். படத்தில் நடிக்கிறார் ஓவியா. காமெடி படமான இதற்கு சிம்பு இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காதலர் தினத்தன்று வெளியிட்டனர். சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படம் மூலம் இசையமைப்பாளர் ஆனார் சிம்பு. இதையடுத்து ஓவியா படத்திற்கு இசையமைக்கிறார். சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Buzz is that Oviya is acting as a lesbian in her upcoming movie 90ml being directed by Anita Udeep. Actor Simbu is the music composer of this comedy movie.

Category

🗞
News

Recommended