நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு சக திரையுலக நடிகைகள் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். பலரும் டிவிட்டரில் இதுகுறித்து வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள். ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். குஷ்பு, ராதா, கௌதமி, நடிகை லட்சுமி, திரிஷா ஆகிய நடிகைகள் ஸ்ரீதேவி மறைவிற்கு மிகுந்த வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள்.
Category
🗞
News