தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்கள் யார் என தேர்ந்தெடுப்பதற்காக நமது தளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தினோம். வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்தக் கருத்துக்கணிப்பில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் 2017-ம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியராக நா.முத்துக்குமார் தேர்வு செய்யப்படுகிறார். ஆனந்த யாழை மீட்டிய முத்துக்குமார் கடந்த ஆண்டு இயற்றியது பேரன்பின் ஆதி ஊற்று. ராமின் தரமணி ஆல்பத்தில் தனித்துத் தெரிந்தார் முத்துக்குமார். 'யாரோ உச்சிக்கிளை மேலே..' என அதிரடித்து 'உன் பதில் வேண்டி' என உருகியது முதல் 'பாவங்களை சேர்த்துக்கொண்டு' என கலங்கவைத்தது வரை நா.முத்துக்குமார் ஆடியது ருத்ர தாண்டவம். ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டை தனது பாடல்களின் மூலம் நிறைத்த கவிஞன் நா.முத்துக்குமாருக்கு அஞ்சலி. பாடலாசிரியர் விவேகாவின் வரிகளில் உருவாகி 'சரவணன் இருக்க பயமேன்' படத்தில் இடம்பெற்ற 'எம்புட்டு இருக்குது ஆச' பாடல் ரொமான்டிக் மெலடியாக ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. எந்த வகையான பாடல் என்றாலும், முத்திரை பதிக்கும் விவேகாவுக்கு வாசகர்கள் அளித்த வாக்குகள் 4.42%. இன்னும் பல பாடல்கள் இயற்றி ரசிகர்களின் அபிமானம் பெற வாழ்த்துவோம்.
Category
🗞
News