நாடு முழுக்க மரபுக்கு மாறுவோம் என்று சாஃப்ட்வேர் எஞ்சினியர் தொடங்கி சாதாரண குடிமகன்வரை இயற்கை விவசாயம் நோக்கித் திரும்பத் தொடங்கிவிட்டார்கள் என்பது காலத்தின் கட்டாயம்.
இதை சில ஆண்டுகளுக்கு முன்பே திரைப்பட துறையைச் சார்ந்தவர்களும் தொடங்கியது பலருக்கும் தெரியாத செய்தி. நடிகர் பசுபதி பெரிய பாளையத்தில் ஆர்கானிக் விவசாயப் பண்ணை வைத்திருக்கிறார். அதுபோலவே பிரகாஷ் ராஜ்,பார்த்திபன் இருவரும் ஈசிஆர் ரோட்டில் வைத்திருக்கிறார். கன்னட நடிகர் கிஷோர் பெங்களூரில் பெரிய அளவில் விவசாயம் செய்கிறார். பண்ணை வீடு வைத்திருக்கும் நட்சத்திரங்கள் பலர் இருக்கிறார்கள்.அதெல்லாம் இயற்கை விவசாயத்தில் சேர்த்தியில்லை என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது ரொம்ப அவசியம்.
இப்போது இயற்கை விவசாயத்தின் மீது லேட்டஸ்டாக கவனம் செலுத்தியிருப்பவர் பின்னணிப் பாடகர் மனோ. வேலூர் மாவட்டத்திலுள்ள பனப்பாக்கம் கிராமத்தில் பல ஏக்கர் நிலங்களை வாங்கி விவசாயம் செய்துவருகிறார். முழுக்க தென்னை மரங்கள், அதன் ஊடாக இயற்கை விவசாயம் என பிரமாதப் படுத்தியிருக்கிறார். மாதத்தில் பாதி நாள் அங்கேதான் இருக்கிறார்.
தவிர, நண்பர்கள் வந்தால் தங்குவதற்கு ஒரு வீடும், அதை ஒட்டி ஒரு பிரம்மாண்டமான நீச்சல் குளத்தையும் உருவாக்கியிருக்கிறார். மனோ, பண்ணை வீட்டில் இருக்கிற நாட்களில் உள்ளூர் விவசாயிகளோடு சந்திப்பு நடக்குமாம்! அவர்கள் சொல்லும் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு விவசாய முறைகளை முன்னெடுப்பாராம்.
Top stars are nowadays busy in Organic farming in Chennai suburban

Category
🗞
News