• 7 years ago
பாலகிருஷ்ணாவை கிண்டல் செய்த மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திராவை பாலைய்யா ரசிகர்கள் கலாய்த்துள்ளனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த ஜெய் சிம்ஹா படம் அண்மையில் வெளியானது. அந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் பாலகிருஷ்ணா மஹிந்திரா பொலிரோ காரை ஒரு கையில் தூக்குவார். அந்த காட்சியை பார்த்த ஒருவர் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திராவிடம் ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

பாலகிருஷ்ணா காரை தூக்கிய காட்சி குறித்த ட்வீட்டை பார்த்த ஆனந்த் மஹிந்திரா, ஹா ஹா. பொலிரோ செக்அப் செய்ய இனி நம் ஒர்க்ஷாப்களில் ஹைட்ராலிக் லிப்டுகள் தேவையில்லை என்று பதிலுக்கு ட்வீட்டினார்.

Balakrishna fans are trolling Mahindra group chairman Anand Mahindra who in a lighter tone commented about Balakrishna lifting a Bolero car with one hand in his movie Jai simha directed by KS Ravikumar.

Category

🗞
News

Recommended