நாம் தினசரி சாப்பிடும் உணவான சைவ உணவுகளிலேயே பல சத்துக்கள் அடங்கியுள்ளது என்றாலும் கூட, நீங்கள் வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவை சாப்பிடலாம். அசைவ உணவு என்று வரும் போது நாம் சாப்பிடும் கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியை விட மீன் உணவை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. மீன் என்பது சிறியவர்கள் வரை பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு மிகச்சுவையான உணவாகும். அதிலும் பிரஷ் ஆன மீனில் உள்ள சுவை என்பது வேறு எதிலும் கிடைக்காது. மீன் என்று வரும் பொழுது உங்களுக்கு இன்னொரு சந்தேகமும் வரும்... எந்த மீனில் அதிக சத்துக்கள் உள்ளது... எந்த மீன் உடலுக்கு மிகவும் நல்லது என்ற சந்தேகம் தான் அது...! மீன்களில் மிகவும் குறைவான விலையில் கிடைப்பது நெத்திலி மீனும், மத்தி மீனும் தான்.. இதன் விலை குறைவு என்பதற்காக இதன் சுவையில் குறைவு இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்.. இது சுவையில் அலாதியானது ஆகும்...! இந்த பகுதியில் நெத்திலி மீன் மற்றும் மத்தி மீன்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றியும் தரமான மீனை எப்படி தேர்ந்தெடுத்து வாங்குவது என்பது பற்றியும் காணலாம்.
which fish is most healthy
which fish is most healthy
Category
🗞
News