உணவின்றி இறக்கும் குழந்தைகள்... சவூதி- ஏமன் போரால் நடக்கும் கொடுமை- வீடியோ

  • 7 years ago
ஏமனுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக சிறிய அளவில் போர் நடந்து வருகிறது. இதனால் இருநாட்டிலும் இருக்கும் பல லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடத்தை காலி செய்து வருகின்றனர். தினமும் கிட்டத்தட்ட 130 குழந்தைகள் இதனால் மரணம் அடைவதாக கணக்கெடுப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த போர் தற்போது சவூதிக்கும், லெபனானுக்கும் இடையில் வேறு பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. இதில் தற்போது ஈராக் நாடும் தனது பலத்தை காட்ட துடித்துக் கொண்டு இருக்கிறது. ஷியா, சன்னி முஸ்லீம் பிரச்சனை தான் இந்த நான்கு நாடுகளுக்கு இடையில் பிரிவை உண்டாக்கி இருக்கிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் சவூதிக்கு எதிராக ஈராக், ஏமன், லெபனான் கூட்டு சேர்ந்து உள்ளது.
ஏமனுக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையில் கடந்த ஒரு மாதமாக சிறிய அளவில் போர் நடந்து வருகிறது. இதற்கு முதற்காரணம் சன்னி, ஷியா முஸ்லீம் பிரச்சனைதான். முதலில் ஈராக்கிற்கும், சவுதிக்கும் இடையில்தான் பிரச்சனை தொடங்கியது.