Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/30/2017
சனிபகவான் இதுநாள்வரை துலாம் ராசிக்கு 2வது இடமான விருச்சிகத்தில் அமர்ந்திருந்தார் இனி 3 ஆவது இடமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்வது சிறப்பாகும்.
துலாம் ராசியில் சித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரங்களையும் அறிந்து கொள்வோம்.
டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார். சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 12வது இடம், 5வது இடம் 9வது இடங்களின் மீது விழுகிறது.இதுவரை உங்கள் ராசிக்கு 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் சொல்ல முடியாத வகையில் துயரங்கள், வேதனைகள், வீண் விரயங்கள் மற்றும் பிரச்சனைகளை கொடுத்து வந்தார். அவர் இப்பொழுது உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பு ஆகும். இதுவரை பட்ட கஷ்டத்திற்கு ஒரு விடிவு காலமாகும்.சனி பெயர்ச்சி மாபெரும் அதிர்ஷ்டம் கிடைக்கும். 3வது இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். துலாம் ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள். இனி எல்லாம் இன்ப மயம்தான். பகைவர்களாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள்.

Sanipeyarachi 2017 palangal parikarangal for Thulam rasi. Details palangal Chithirai,Swathi and Vishakam Natchatirangal.

Recommended