• 8 years ago
சனிபகவான் உங்கள் ராசிக்கு 5 ஆவது இடமான தனுசு ராசியில் புண்ணிய சனியாக சஞ்சாரம் செய்கிறார். சிம்மம் ராசியில் மகம், பூரம் , உத்திரம் 1ஆம் பாதம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரங்களையும் பார்க்கலாம். டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.
இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 4வது இடத்தில் அர்த்தாஸ்டம சனியாக இருந்தவர் 5வது இடத்திற்கு வருகிறார். இதுநாள்வரை சிரமத்தில் இருந்தவர்கள் விடுதலை பெறுகிறார்கள். நோய் நொடிகள் பிரச்சினைகள் தீரும். சனிபகவானின் பார்வை தனுசில் இருந்து கும்பம், மிதுனம், கன்னி ராசி மீது விழுகிறது. சிம்மம் ராசிக்கு 2வது இடம்,7வது இடம் 11வது இடங்களின் மீது சனிபகவானின் பார்வை விழுகிறது.

பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். அல்லல்பட்டவர்களுக்கு வியாதிகளில் இருந்து விடுதலை கிடைக்கும். குழந்தைகளின் படிப்பில் நாட்டம் குறையும். குழந்தைகளை கண்காணியுங்கள். கூட்டு குடும்பத்தில் சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் வந்து சேரும். குடும்பத்தில் குழப்பங்கள் வந்தாலும் அது நன்மையிலே முடியும்.

புதிய வாய்ப்புகள் உருவாகும். திருமணம் நடைபெறாத சிம்ம ராசிக்காரர்களே காதல் வயப்படுவீர்கள். சனிபகவான் 7வது இடத்தை பார்ப்பதால் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்படும். தொழில் பங்குதாரர்கள் பிரிந்து செல்ல வாய்ப்பு ஏற்படும். புதியதாக வீடு வாகனம் வாங்க ஏற்படும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு தனவரவை தரும் காரணம் 11வது இடத்தை 7வது பார்வையாக சனிபகவான் பார்க்கிறார். மூத்த சகோதர சகோதரிகள் அன்பும் ஆதரவும் கிட்டும். சனிபகவான் 2வது இடத்தை லாப ஸ்தானத்தை பார்க்கிறார். மூத்தவர்களிடம் ஆலோசனை பெறலாம். குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பணம் வரவும், அதே போல செலவும் ஏற்படும். சிக்கனம் அவசியம் சிம்மராசிக்காரர்களே.

Sanipeyarachi 2017 palangal parikarangal for kadagam rasi. Details palangal Magam, Pooram and Uthiram 1 patham.

Recommended