• 8 years ago
'ஜிஎஸ்டி சட்ட விதிமுறைகளை பாமரரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளை முழுமையாக மாற்றியமைக்க ஜிஎஸ்டி ஆணையம் முடிவுசெய்துள்ளது. நீ.....ண்ட இழுபறிக்கு பின்பு அனைத்து மாநிலங்களில் முழு ஒத்துழைப்புடன் கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டாலும், கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு (Input Tax Credit benefit) போன்றவற்றை பதிவேற்றம் செய்யவும் நிகர வரயை செலுத்தவும் தேவையான படிவங்களை பூர்த்தி செய்யவும், ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் ஜிஎஸ்டிஎன் இணையதளம் முழுமையாக வடிவமைப்பு செய்யப்படவில்லை. இதனை உணர்ந்த ஜிஎஸ்டி ஆணையமும் இந்த படிவங்கள் எல்லாம் ஆகஸ்டு மாத இறுதிக்குள் முழுமையாக வடிவமைப்பு செய்யப்பட்டுவிடும் என்று உறுதியளித்தது.

ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டாலும் இவற்றை பதிவேற்றம் செய்வது எப்படி என்று தொழில் துறையினரும் வர்த்தகர்களும் கடும் குழப்பத்தில் தவித்தனர். மேலும், ஜிஎஸ்டி வரிமுறையில் பெரும்பாலான நுகர்பொருட்களுக்கான வரியானது அதிக பட்சமாக இருப்பதாக அனைத்து தொழில்துறையினரும் வர்த்தகர்களும்

மத்திய அரசும் இவர்களில் சூழ்நிலையை புரிந்துகொண்டு தொழில் துறையினரும் வர்த்தகர்களும் தங்களின் கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு வரிப்பயன்பாடு மற்றும் நிகர வரி ஆகியவற்றை ஜிஎஸ்டி இணையதளத்தில் செலுத்துவதற்கு கால அவகாசம் அளித்தது. இருப்பினும், பெரும்பாலான வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு இன்னமும் ஜிஎஸ்டி வரி முறையை சரிவர புரிந்ததுகொள்ள முடியவில்லை.

GST Council is ready to modify the GSTN rules and procedures from next year onwards. The changes will be including simplify the GST tax return filing process.

Category

🗞
News

Recommended