• 8 years ago
அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஈ.பி.எஸ் அணி-ஓ.பி.எஸ் அணி தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் போலியானவற்றை எளிதில் கண்டறிந்துவிட்டோம். அதன்படி பார்த்தால் அவர்கள் கூட்டிய பொதுக்குழுவே செல்லாது. எங்கள் தரப்பிடம் இரட்டை இலை வந்து சேரும் என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அணியும் தினகரன் அணியும் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கொண்டாடி வருகின்றன. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களில் போலியான கையொப்பம் இருப்பதால், சாட்சியங்களை அழைத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என தினகரன் தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இதனை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. கோரிக்கை ஏற்கப்படாததால், இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என அதிரடியான கோரிக்கையை முன்வைத்தார் தினகரன். இதற்கு முதல்வர் தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
இதுகுறித்து பத்திரிகையாளர்களிம் பேசிய தினகரன், தேர்தல் ஆணையத்தின் முன்பு எப்படியாவது தங்கள் தரப்பை வலியுறுத்தி இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுவிடலாம் என உறுதியாக இருக்கிறார்கள். எங்கள் தரப்பில் கூறப்படும் தகவல்களை முழுமையாக விசாரித்து முடிவெடுங்கள் என்று கூறுகிறோம். அவர்கள் அளித்த பிரமாணப் பத்திரத்தில் ஏகப்பட்ட முறைகேடுகள் உள்ளன. இதில், எத்தனை குறைபாடுகள் உள்ளன என்பதைத்தான் தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும். அதை விடுத்து ஒருபக்கமாக ஆணையம் செயல்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பினர் கைகளுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என நினைக்கிறார்கள். அப்படியேக் கிடைத்தாலும் இரட்டை இலைச் சின்னம் செத்துவிடும். இது ஒரே நாளில் முடிகின்ற விஷயம் இல்லை. யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று மக்களுக்குத் தெரியும் எனக் கொந்தளித்தார்.

AIADMK Dinakaran faction still confident over the two leaves symbol.

Category

🗞
News

Recommended