• 7 years ago
சங்கர மடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி உயிரிழந்ததை தொடர்ந்து காமாட்சியம்மன் கோவில் நடை அவசரஅவசரமாக சாத்தப்படுகிறது. காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரருக்கு இன்று காலை திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

தனியார் மருத்துவமனையில் இருந்து ஜெயேந்திரரின் உடல் சங்கர மடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. ஜெயேந்திரரின் மறைவை அடுத்த சங்கரமடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்த வீதி உலா சென்றிருந்த காமாட்சியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலுக்குள் உள்ள பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அயோத்தி பிரச்சனையில் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட ஜெயேந்திரர் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கிலும் சிக்கி சர்ச்சைக்குள்ளானார்.

Category

🗞
News

Recommended