குன்னார் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த வருண் சிங் பெங்களூரு மருத்துவமனையில் உயிரிழ்ந்தார். கேப்டன் வருண் சிங், உத்தர பிரதேசத்தின் தேவரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். விபத்து குறித்து அறிந்த பிறகு அவரின் கிராம மக்கள் வருண் சிங் விரைவாக குணமடைய வேண்டும் என்ற பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். வருண் சிங்கின் உறவினர் அகிலேஷ் பிரதாப் சிங் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர். வருண் சிங்கின் தந்தை கிருஷ்ண பிரதாப், இந்திய ராணுவத்தில் ஓய்வுப் பெற்ற கர்னல் ஆவார்.
Category
🗞
News