• 4 years ago
Reporter - கே.குணசீலன்

உங்களுக்குத்தான் சார் நெஞ்செலும்பு வெட்டுறேன்...’’, ‘‘கொத்துக்கறிக்கு நேரம் ஆகும்... இருந்து வாங்கிட்டுப் போறீங்களா..?”, ‘‘நம்ம கடையில மாதிரி தொடக்கறி எங்க கெடைக்கும் உங்களுக்கு..?’’ - செல்லம்மாள் பாட்டியின் கறிக்கடையில் அவர் வாயும் அவர் பிடித்திருக்கும் முட்டிக் கத்தியும் ஓய்வதே இல்லை.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே கறிக்கடை நடத்திவரும் செல்லம்மாளுக்கு 70 வயதானாலும் கடையில் கறி வெட்டுவதில் தொடங்கி, எடை போட்டு, காசை வாங்கி கல்லாவில் போடுவதுவரை பம்பரமாகச் சுழன்று அனைத்து வேலைகளையும் ஒற்றையாளாகச் செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறார்.

‘‘70 வயசு இளவட்டம் பாட்டி நீங்க...’’ என்றால், ‘‘அப்புடித்தான் எல்லாரும் சொல்லுறாக...’’ என்றபடி, தன் வாழ்வைப் பேச ஆரம்பித்தார்.

‘‘நான் கத்தியக் கையில யெடுத்து 45 வருஷங்கள் ஆச்சு. என் சொந்த ஊரு கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி. என் வீட்டுக்காரரு வஞ்சியப்பனோட, பொழப்பு தேடி தஞ்சாவூருக்கு வந்து சின்ன குடிசை வீட்ல வாடகைக்கு நாங்க குடியேறினப்ப, எனக்கு 20 வயசு இருக்கும். என் வீட்டுக்காரரு இந்த ரோட்டோரத்துலதான் ஆட்டுக்கறிக்கடை வெச்சி ருந்தாரு. நானும் அவருக்கு ஒத்தாசையா கடையில நிப்பேன். நல்ல வியாபாரம். எங்களுக்கு ஒரு பொம்பளப் புள்ள பொறந்துச்சு. பொழப்புக்காக சொந்த பந்தங்கள விட்டுட்டு வெளியூர் வந்த கவலையே எனக்கு வரவிடாம, என் வீட்டுக்காரரு என்னை அம்புட்டு நல்லா பார்த்துக்கிட்டாரு.

Category

🗞
News

Recommended