• 5 years ago
ஆஸ்திரேலியாவில், வீட்டில் தீப்பற்றியது தெரியாமல் உறங்கிக்கொண்டிருந்த உரிமையாளரை எழுப்பி, அவரது செல்லப்பிராணி கிளி ஒன்று காப்பாற்றிய நிகழ்வு நடந்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தைச் சேர்ந்தவர் ஆன்டன் குயென் (Anton Nguyen). அவர், தன் வீட்டில் செல்லப்பிராணியாக எரிக் என்ற கிளியை வளர்த்துவருகிறார். புதன்கிழமை அன்று குயென் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென அவருடைய கிளியான எரிக் சத்தம்போடத் தொடங்கியிருக்கிறது. இதனால் தூக்கம் கலைந்த ஆன்டன், அறையின் வெளிப்புறம் சென்று பார்த்தபோது, தன் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது கிளி தீப்பிடித்த ஆரம்பநிலையிலேயே எச்சரித்ததால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். அவருடைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் எச்சரிக்கும் கருவி ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது. அந்தக் கருவி எச்சரிக்கை செய்வ்தற்கு முன்னரே எரிக், தன் உரிமையாளரை எச்சரித்துவிட்டது. இதனால் தீப்பிடித்த இடத்திலிருந்து வெளியேற அவருக்கு போதுமான நேரம் கிடைத்தது.

Category

🗞
News

Recommended