• 5 years ago
Reporter - மணிமாறன்.இரா
"ரெண்டு பேரும் பிள்ளைகளைப் பார்க்க ரொம்ப ஆவலாக இருந்ததாலயும், விரும்பி டூவிலர்ல வந்ததாலயும் 1400 கி.மீ தூரம் வந்தும் எந்த அலுப்பும் தெரியல!"
புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வம் - சங்கீதா தம்பதி கடந்த பல வருடங்களாகவே மும்பையில் வசித்துவருகிறார்கள். இவர்களுக்கு வேணி என்ற மகளும், யோகேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். விடுமுறையின் போதெல்லாம், பிள்ளைகளைப் புதுக்கோட்டையில் உள்ள தங்களது பெற்றோர்களின் வீட்டில் விட்டுச் செல்வது இவர்களின் வழக்கம். அதன்படி, கொரோனா எதிரொலியாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவே, பிள்ளைகளை மும்பையிலிருந்து அழைத்து வந்த செல்வம், கறம்பக்குடி அருகே பில்லக்குறிச்சியில் உள்ள தனது மாமனார் வீட்டில் விட்டுச் சென்றார்.இந்த நிலையில் அடுத்த சில தினங்களிலேயே நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ரயில், பேருந்து என அனைத்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், பிள்ளைகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தங்கள் தாத்தா, பாட்டி வீட்டிலேயே இருக்கின்றனர். பெற்றோரைப் பார்க்க முடியாமல் பிள்ளைகளும், பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் பெற்றோரும் தவித்து வந்தனர். இதற்கிடையே, மகன் யோகேஸ்வரனுக்கு அக்டோபர் 28-ம் தேதி பிறந்த நாள். பிள்ளையுடன் பிறந்த நாளைக் கொண்டாட முடிவெடுத்த பெற்றோர், மும்பை-கறம்பக்குடி 1400 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கூட்டரிலேயே பயணம் செய்து தங்களது பிள்ளைகளுடன் சேர்ந்திருக்கின்றனர். #birthdaysurprise

Category

🗞
News

Recommended