MEENAKSHI INSTITUTE OF CATERING & HOTEL MANAGEMENT, VALASARAVAKKAM, CHENNAI - https://mgrihmct.edu.in/
Reporter - பி.ஆண்டனிராஜ்
Camera - எல்.ராஜேந்திரன்
எனக்கு என் பேரனையும் அவனுக்கு என்னையும் விட்டா வேற சொந்தம் இல்லய்யா... பாவிப்பய அவனும் குடிகாரனாயிட்டான். நான் பிச்சையெடுக்குற காசை வாங்கிட்டுப்போய் குடிச்சிட்டு வருவான். நானும் கொடுத்துருவேன். என்ன செய்ய... நாளைக்கு நான் செத்தா தூக்கிப்போட ஆளு வேணுமில்ல...’’ - உடைகள் மட்டுமல்லாமல் ஆளும் கந்தலாக நைந்து போயிருக்கும் செல்லம்மா பாட்டியிடமிருந்து உடைந்து உடைந்து விரக்தியாக உதிர்கின்றன வார்த்தைகள்.
85 வயதாகிவிட்டது செல்லம்மா பாட்டிக்கு. இத்தனை ஆண்டுகளில் காலம் அவரிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டிருக்கிறது - உயிரைத் தவிர. இயல்பான முதுமையின் கோடுகளையுமே வறுமை வரைந்திருந்ததால், பாட்டியால் எழுந்து நிற்கக்கூட திராணியில்லை. கண்பார்வையும் காது கேட்கும் திறனும் மங்கிவிட்டன. ஆனாலும், வெயிலைப் பொருட்படுத்தாத சருகைப்போல நெல்லை சாலையோரம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் செல்லம்மா பாட்டி.

Category
🗞
News