• 5 years ago
Reporter - சிந்து ஆர்
பல வருடங்களுக்குப் பிறகு எனக்கு வேலை கிடைத்தது. எனவே, என் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கடவுளிடமே நான் செல்கிறேன்’ எனக் கடிதம் எழுதி வைத்திருக்கிறார் நவீன்.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த எள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த செல்லசுவாமி என்பவரின் மகன் நவீன் (32). இவருக்குச் சிறு வயது முதலே கடவுள் பக்தி அதிகமாக இருந்துவந்திருக்கிறது. இவர் இன்ஜினீயரிங் படித்து முடித்த பிறகு வேலைக்காக முயன்றுவந்திருக்கிறார். வங்கித் தேர்வுகளும் எழுதிவந்திருக்கிறார். ஆனால், அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. எனவே, இறைவனிடம் ஒரு வேண்டுதலை முன்வைத்திருக்கிறார். தனக்கு வேலை கிடைத்தால், தனது உயிரையே காணிக்கையாகத் தருவதாகவும், வேலை கிடைத்தவுடன் இந்த நேர்த்திக்கடனைச் செலுத்துவதாகவும் இறைவனிடம் வேண்டுதல் வைத்திருக்கிறார். இப்படி வேண்டுதல் வைத்த பிறகு தொடர்ந்து வேலைக்கு முயன்றிருக்கிறார்.அவருக்கு, வங்கி உதவி மேலாளராக சமீபத்தில் பணி கிடைத்திருக்கிறது. மும்பையிலுள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணியில் சேர ஆணை வந்திருக்கிறது. இதையடுத்து கடந்த 15 நாள்களுக்கு முன்னர் மும்பையிலுள்ள வங்கியில் பணிக்கும் சேர்ந்திருக்கிறார். வேலைக்குச் சேர்ந்து 15 நாள்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் மும்பையிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வந்திருக்கிறார். அங்கிருந்து மார்த்தாண்டம் சென்று, தனது நண்பரைப் பார்த்துப் பேசியிருக்கிறார். பிறகு தன் சகோதரருக்கு போன் செய்து, தான் ஊருக்கு வந்திருப்பதாகத் தகவல் கூறியிருக்கிறார். பின்னர் பேருந்தில் நாகர்கோவிலுக்கு வந்திருக்கிறார்.

Category

🗞
News

Recommended