• 4 years ago
MEENAKSHI ARTS & SCIENCE COLLEGE FOR WOMEN, K.K.NAGAR, CHENNAI - https://www.maher.ac.in/
Reporter - ஆர்.வைதேகி
Camera - பிரியங்கா.ப
ஜான் சுதாகர், சுலேகா சுதாகர் ஜோடியைப் பார்க்கும்போது ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்பு, மஞ்சிமா மோகனை வயதான கெட்டப்பில் பார்ப்பது போலிருக்கிறது. 68 வயது சுதாகருக்கும் 66 வயது சுலேகாவுக்கும் விருப்பமான பொழுதுபோக்கு என்ன தெரியுமா?
புல்லட்டில் பயணம் செல்வது. பொழுதுபோக்கையே தொழிலாக வும் மாற்றிக்கொண்ட அதிர்ஷ்டசாலிகள் இவர்கள். மிகப்பிடித்த புல்லட்டுகளை கஸ்டமைஸ் செய்து தருவதுதான் இவர்களது வேலையே. சென்னை, பள்ளிக்கரணையில் உள்ள தங்கள் ‘தி புல்லட் ஃபேக்டரி' நிறுவனத்தின் மூலம் புல்லட்டுகளை கஸ்டமைஸ் செய்து தருவது, இன்ன பிற சர்வீஸ்களைச் செய்வது என இந்த வயதிலும் இருவரும் செம பிஸி. வயதானவர்களை வீட்டிலேயே இருக்கச் சொல்கிறது பெருந்தொற்றுக்காலம். ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்து இள வயதினரும் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் இந்த நேரத்தில், சுதாகர் - சுலேகா ஜோடியோ வழக்கத்தைவிடவும் பிஸி.
‘‘சின்ன வயசுலேருந்தே மோட்டார் சைக்கிள்ஸ் மேல அப்படியொரு காதல். பழைய பைக்கைப் பார்த்தா, உடனே அதைப் புதுப்பிச்சு ஓட்டினா நல்லாருக்குமேனு யோசிப்பேன். ஸ்கூல் காலேஜ்ல அந்தக் கனவு நனவாகலை. சி.ஏ படிச்சிட்டு ஒரு கம்பெனியில வேலை செய்திட்டிருந்தேன். கல்யாணத்துக்குப் பிறகு, ராணுவ ஏலத்துல 2,600 ரூபாய்க்கு ராயல் என்ஃபீல்டு பைக் வாங்கினோம். #RE #royalenfield #bikelover

Category

🗞
News

Recommended