• 5 years ago
MEENAKSHI INSTITUTE OF CATERING & HOTEL MANAGEMENT, VALASARAVAKKAM, CHENNAI - https://mgrihmct.edu.in/
Reporter - சிந்து ஆர்
தன் ஐந்து பிள்ளைகளுக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க விரும்பினார் கேரளாவைச் சேர்ந்த ரமாதேவி.கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் போத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் - ரமாதேவி தம்பதிக்கு ஐந்து குழந்தைகள். ஐந்து குழந்தைகளும் ஒரே பிரசவத்தில், சில நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள். 1995-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி ஓர் ஆண் குழந்தை, நான்கு பெண் குழந்தைகள் என நிகழ்ந்த ரமாதேவியின் பிரசவம், கேரளாவில் கொண்டாடப்பட்டது. ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகள் என கேரள மீடியாவில் அது முக்கியச் செய்தியானது. நட்சத்திரத்தில் பிறந்த தன் குழந்தைகளுக்கு உத்ரஜா, உத்ரா, உதாரா, உத்தமா, உத்ரஜன் எனப் பெயரிட்டு வளர்த்தனர் பிரேம்குமாரும் ரமாதேவியும். தன் ஐந்து குழந்தைகளையும் ஐந்து ரத்தினங்கள் என்று கொஞ்சிய பெற்றோர், அவர்களை 'பஞ்ச ரத்தினம்' என ஆசையுடன் அழைத்தனர்.ஐந்து குழந்தைகளுக்கும் பிறந்தநாள், அவர்களை முதன்முதலாகப் பள்ளியில் சேர்த்த நாள், அவர்களுக்குப் பொதுத்தேர்வு முடிவு வரும் நாள் என்று எல்லாமே அந்தக் குடும்பத்தில் அதிக மகிழ்ச்சியுடனும் உலகத்துக்கு ஆச்சர்யத்துடனுமே நடந்தன.

Category

🗞
News

Recommended