• 4 years ago
MEENAKSHI ARTS & SCIENCE COLLEGE FOR WOMEN, K.K.NAGAR, CHENNAI
URL: https://www.maher.ac.in/
சென்னையில் ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்றில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜையில் ஆட்டோ ஓட்டுநர்களின் அஜாக்கிரதையால் ஒரு நிறைமாத பசுமாடு மின்சாரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.பாட்ஷா படத்தில் "நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்" என்ற பாடலை ஒலிக்கவிட்டு ஆயுத பூஜை வெகு விமர்சையாக கொண்டாடுவதுபோல தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளின் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அப்படி சென்னையில் ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்றில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜையில் ஆட்டோ ஓட்டுநர்களின் அஜாக்கிரதையால் ஒரு நிறைமாத பசுமாடு மின்சாரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை கீழ்பாக்கம் லாக் நகர் பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன்(52). இவர் தனது வீட்டில் 15 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினந்தோறும் அருகிலுள்ள தோப்புக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு அழைத்து வந்து வியாபாரம் செய்து வருகிறார்.

Category

🗞
News

Recommended