• 4 years ago
Reporter - வருண்.நா
ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் நேற்று (அக். 26) தனியார் கல்லூரி வளாகம் முன்பாக 21 வயது இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
றாபத்திரிகையாளர் ராஜ் சேகர் ஜா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஹரியானாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகளைப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், காரிலிருந்து வெளியில் இறங்கிய இளைஞர் ஒருவர் துப்பாக்கியை எடுத்துக் காட்டி இளம்பெண்ணின் கைகளைப் பிடித்து இழுக்கிறார். அந்த இளைஞரின் கையில் பிடிபடாமல் தப்பிக்க முயல்கிறார் அந்த இளம்பெண்.
அப்போது காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த இன்னொரு இளைஞர் காரைவிட்டு கீழே இறங்கி துப்பாக்கி வைத்திருந்த இளைஞரைக் காருக்குள் ஏற்ற முயல்கிறார். அதற்குள்ளாக இளம்பெண்ணைச் சுட்டுவிடுகிறார் அந்த இளைஞர். பின்னர் இரண்டு இளைஞர்களும் காரில் ஏறி அந்த இடத்திலிருந்து தப்பிக்கிறார்கள். பட்டப்பகலில், கல்லூரியின் முன்பாக தலையில் சுடப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Category

🗞
News

Recommended