• 4 years ago
Reporter - எம்.திலீபன்
Camera - தே.தீட்ஷித்
`மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு பிறகு உடற்கூறாய்வு செய்யப்பட்டு முருகனின் உடல் அவரின் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படும்’ என பெங்களூர் போலீஸார் கூறுகின்றனர்.திருச்சி லலிதா ஜுவல்லரியில் நகைக்கடையில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் முருகன் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.கடந்த ஆண்டு, அக்டோபர் 2-ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டது. கடையின் மேற்கு சுவரைத் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட ஆபரணங்களைக் கொள்ளையடித்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Category

🗞
News

Recommended