• 5 years ago
Meenakshi Arts & Science College for Women, K.K.Nagar, Chennai - http://www.maher.ac.in/
Reporter - குருபிரசாத்
Camera - தி.விஜய்
இயற்கையைச் சற்றும் புரிந்துகொள்ளாமல் எழுதப்படும் ‘அட்டகாசம் செய்யும் யானைகள்’ என்ற செய்தியைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, ‘அட்டகாசம் செய்வது யானைகள் இல்லை... மனிதர்கள்தான்!’ என்று பாடம் எடுத்தது ‘சின்னத்தம்பி’ யானை. சின்னத்தம்பியை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன..?
`கோவை மாவட்டத்தில் விவசாய நிலங்களைச் சேதப்படுத்துகிறது’ என்ற புகாரில், கடந்த ஆண்டு வனத்துறையால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது சின்னத்தம்பி. டாப்ஸ்லிப் வரகளியாறு வனத்தில் விடப்பட்ட அந்த யானை, சில நாள்களிலேயே தனது வாழ்விடத்தைத் தேடி மரபார்ந்த வழித்தடங்களில் நடக்க ஆரம்பித்தது. 100 கிலோமீட்டர் தூரம் நடந்தாலும், ஒருவரைக்கூடத் தாக்கவில்லை. ஆனால், அந்த நாள்களில் யானைகள் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளையும் பேசவைத்தது சின்னத்தம்பி. #kumki #chinnathambi #elephant

Category

🗞
News

Recommended