• 5 years ago
Reporter - மணிமாறன்.இரா

Note:
இவருக்கு உதவி செய்ய முன்வரும் வாசகர்கள், help@vikatan.com - என்ற மெயில் ஐ.டிக்கு தொடர்புகொண்டு நீங்கள் செய்ய நினைக்கும் உதவி குறித்துத் தெரிவிக்கலாம். உங்கள் உதவியை கயல்விழிக்கு கொண்டு சேர்க்கும் பணியை விகடன் ஒருங்கிணைக்கும்.

10-ம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி. குடும்ப வறுமை காரணமாக கயல்விழியால் தற்போது ஆன்லைன் கிளாஸில் பங்கேற்க முடியாத நிலை. மருத்துவக் கனவை மனதில் சுமந்துகொண்டு, சாப்பாட்டுக்காகத் தினமும் கூலி வேலைக்குச் சென்று வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் வலக்கொண்டான்விடுதியில் வசிக்கிறது கயல்விழியின் குடும்பம். கயல்விழி பதினொன்றாம் வகுப்பு முடித்து இந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்புக்குச் செல்கிறார். பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி. குடும்ப வறுமை, கையில் ஆண்ட்ராய்டு போனும் இல்லை என்பதால், கயல்விழியால் தற்போது ஆன்லைன் கிளாஸில் பங்கேற்க முடியாத நிலை. மருத்துவக் கனவை மனதில் சுமந்துகொண்டு, சாப்பாட்டுக்காகத் தினமும் கூலி வேலைக்குச் சென்று வருகிறார். #poverty #poor #povertybench

Category

🗞
News

Recommended