• 4 years ago
Reporter - அருண் சின்னதுரை

``என் மகள் ஆன்லைன் கிளாஸ் எரிச்சலாக இருக்குனு சொல்லிட்டிருந்தா. போகப் போக சரியாகிடும்னு சொல்லிக்கிட்டிருந்தோம்’’ என்கிறார் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தந்தை.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்த செல்லப்பனேந்தலைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி. ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார். இவரின் மகள் சுபிக்ஷா (15). மதுரை தெப்பக்குளம் அருகேயுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு 10-ம் வகுப்புக்குச் செல்லவிருந்தார். மாணவி சுபிக்ஷா தினமும் மதுரைக்கு அரசுப் பேருந்தில் பள்ளிக்கு சென்று வந்திருக்கிறார். பள்ளி மற்றும் மாநில, மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட வெவ்வேறு திறன் போட்டிகளில் வெற்றி பெற்று பல்வேறு நபர்களிடம் பாராட்டு பெற்றிருக்கிறார்.#viral #onlineclass #suicide

Category

🗞
News

Recommended