• 4 years ago
Reporter - ஆ.சாந்தி கணேஷ்

அடிக்கடி பெற்றோர் சண்டையிடுவதைப் பார்ப்பதாலும், பெற்றோரிடம் அடிக்கடி அடி வாங்குவதாலும் மன அழுத்தத்துக்கு ஆளாகிற குழந்தைகளும் சில நேரங்களில், அசாதாரணமாக நடந்துகொள்வார்கள். இதை பேய் பிடித்துவிட்டது என்று நினைத்துக்கொண்டு மருத்துவர்களிடம் அழைத்து வருவார்கள்.

அறிவியல் வளர்ந்துவிட்ட இக்காலத்திலும் பெண்களுக்கு சாமி வருவது, பேய் பிடிப்பது போன்ற `அசாதாரண' கட்டுக்கதைகள் பரவிக்கொண்டுதான் இருக்கின்றன. சில நாள்களுக்கு முன்னால், கர்நாடகாவைச் சேர்ந்த 3 வயதுப் பெண் குழந்தைக்குப் பேய் ஓட்டுகிறேன் என்று பிரம்பால் அடித்தே கொன்றிருக்கிறார்கள். சாமி வருவதற்கும் பேய் பிடிப்பதற்கும் பின்னணியில் இருக்கிற உளவியல் காரணங்கள், தீர்வுகள் பற்றி மனநல மருத்துவர் பூங்கொடி பாலாவிடம் பேசினோம்.

Category

🗞
News

Recommended