• 5 years ago
Reporter - கு.ஆனந்தராஜ்
Camera - எஸ்.தேவராஜன்

``எதிர்பாராத நேரத்தில் நாங்க இருவரும் எங்க வாழ்க்கைத் துணையை இழந்தோம். பிறகு, அவரவர் பிள்ளைகளின் நலனுக்காகவே வாழ்ந்தபோதுதான் ரெண்டு குடும்பங்களும் இணைஞ்சுது. எதிர்பாராத திருப்பமாக நாங்க தம்பதியா இணைஞ்சோம். இப்போ இருவரின் அஞ்சு பிள்ளைகளுக்கும் நாங்கதான் பெற்றோர்!'' - யதார்த்தமாகப் பேசுகிறார்கள் டாக்டர் ரவீந்திரன்-ராஜேஸ்வரி தம்பதி. அரை செஞ்சுரி கடந்த வயதில் இருவருக்கும் காதல் மலர, தங்கள் பிள்ளைகளின் விருப்பத்துடன் புது இல்லறத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர்.

“இன்ஜினீயரான என் கணவர் சோளிங்கர்ல இருந்த டி.வி.எஸ் நிறுவனத்துல வேலை செய்தார். ரொம்பவே சந்தோஷமா வாழ்ந்தோம். 1999-ல் சாலை விபத்துக்குள்ளாகி ஒரு மாசம் சிகிச்சையில் இருந்த கணவர், நினைவு திரும்பாமலேயே இறந்துட்டார். மொத்தக் குடும்பமும் நிலை குலைஞ்சது. சராசரி வெளியுலக வாழ்க்கைகூட தெரியாம தான் இருந்தேன். பிறகு, டி.வி.எஸ் நிறுவன ஸ்கூல்ல டீச்சரா சில வருஷம் வேலை செஞ்சு கிட்டு, பிள்ளைங்களை வளர்த்தேன். #love #Lovestory

Category

🗞
News

Recommended