• 4 years ago
Reporter - மணிமாறன்.இரா

புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் 100-க்கும் அதிகமான பெண்களிடம் செல்போனில் ஆபாசமாகப் பேசியிருக்கிறார். ஒரு சில பெண்களிடம், தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால், அந்தரங்க விஷயங்களை வெளியில் விட்டுவிடுவேன் என்று கூறி மிரட்டியிருக்கிறார்.

புதுக்கோட்டை நகர்ப் பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத பெண் ஒருவர், கணேஷ் நகர் போலீஸாரிடம் ஒரு புகாரளித்தார். அதில், `மர்ம நபர் ஒருவர் எனது செல்போன் எண்ணுக்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்கிறார். போனில் ஆபாசமாகப் பேசுவதோடு, தன் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், அப்படி இல்லையேன்றால், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி வருகிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார். புகாரை விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி புதுக்கோட்டை டி.எஸ்.பி செந்தில்குமார் உத்தரவிட்டதின் பேரில், சைபர் கிரைம் போலீஸாரின் உதவியோடு, கணேஷ் நகர் போலீஸார் தனிப்படை அமைத்து, செல்போன் எண்ணைக் கண்காணித்து, குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Category

🗞
News

Recommended