• 4 years ago
Reporter - சிந்து ஆர்

`இத்தனை வருடங்களாக நார்மலான பெயராகயிருந்த என் பெயர், கொரோனா வைரஸ் உலகில் காலடி எடுத்துவைத்த நாளிலிருந்து ஜாலி பெயராகிவிட்டது." - கொரோனா

``கொரோனா... சீக்கிரம் இங்கே வா..." - பொதுவிடம் ஒன்றில் யாரோ யாரையோ அழைக்க, கழுத்தொடிய சட்டெனத் திரும்பிப் பார்க்கிறார்கள் மக்கள். 34 வயது இல்லத்தரசி கொரோனா, கொஞ்சம் கூச்சமும் கொஞ்சம் சிரிப்புமாக அனைவரின் பார்வையையும் கடந்துசெல்கிறார். ஆம்... அவர் பெயரே கொரோனாதான்!

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் வேளையில், கேரளப் பெண் கொரோனாவிடம் பேசினோம். கேரள மாநிலம், கோட்டயத்தில் வசிக்கிறார் கொரோனா.

``எங்கள் ஊரில் இப்போது என்னை `வைரஸ் வருது', `கோ கொரோனா கோ' என்றெல்லாம் கிண்டல் செய்கிறார்கள்'' என்று சிரித்தபடியே ஜாலியாகப் பேசினார் கொரோனா.

Category

🗞
News

Recommended