• 4 years ago
ஆட்டோவில் வந்த பயணியிடம் ஓரின சேர்க்கைக்கு இணங்குமாறு கூறி கத்திக்காட்டி மிரட்டிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக பணிபுரியும் நாகராஜ், அரும்பாக்கம் பிள்ளையார் கோயில் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி தன் மகனுக்கு பெண் பார்க்க நாகராஜ், பிராட்வேயில் இருந்து ஆட்டோ மூலமாக அண்ணா ஆர்ச் பகுதியில் இறங்கியுள்ளார்.

பின்னர் தன் வீட்டிற்கு செல்ல மீண்டும் ஆட்டோவிற்காக காத்திருந்துள்ளர். இந்நிலையில் அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நாகராஜிடம் அரும்பாக்கம் வழியாக செல்லப் போவதாக கூறி நாகராஜை ஆட்டோவில் ஏற்றியுள்ளார்.

இந்நிலையில், அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோயில் அருகே சென்ற ஆட்டோ ஓட்டுநர், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி நாகராஜை ஓரினச்சேர்க்கைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

Category

🗞
News

Recommended