• 4 years ago
Reporter - குருபிரசாத்

கொரோனா இல்லாதவர்களுக்கு, இருக்கிறது எனக் கூறியதற்காக கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துகள் தெரிவித்ததன் பின்னணியை குடும்பத்தினர் பகிர்ந்துள்ளனர்.

கோவை முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தினசரி புதிய உச்சத்தைத் தொட்டுவரும் கொரோனாவால், கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ஆங்காங்கே பிரச்னைகளும் ஏற்பட்டுவருகின்றன. முக்கியமாக, கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா பரிசோதனையில் குளறுபடி ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக `பாசிட்டிவவா... நெகட்டிவா?' - கோவை மாநகராட்சி கொரோனா குளறுபடி!’ என்ற தலைப்பில் ஏற்கெனவே விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், ``கொரோனா இல்லாத நான்கு பேருக்கு, `இருக்கு’ என்று முத்திரை குத்தி என்னையும், என் குடும்பத்தாரையும் அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துகள்” என ஹோப் காலேஜ், மணீஸ் தியேட்டர் அருகே தனிமைப்படுத்தப்பட்ட ஓர் வீட்டில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களிலும் வைரலாகிவருகிறது.
இந்த பேனர் விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி மாநகராட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், போலீஸார் நேற்று இரவு அந்த பேனரை அகற்றிவிட்டனர். இது குறித்து கோவை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரி ராஜா, ``பேனர் வைத்தவரின் அப்பா, அவர் தங்கை ஆகியோருக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால்தான், குடும்பத்திலிருந்த மற்றவர்களுக்குப் பரிசோதனை செய்தோம். நாங்கள் எடுத்த சோதனைக்கும், அவர்கள் தனியார் மருத்துவமனையில் எடுத்த சோதனைக்கும் ஐந்து நாள்கள் இடைவெளி இருக்கிறது.

நோய் எப்போது, எப்படி, யாரிடமிருந்து வருகிறது எனத் தெரியவில்லை. அறிகுறி இல்லாதவர்களுக்கு இடைவெளிவிட்டு சோதனை செய்யும்போது இப்படி வரலாம். இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தாக்கம் சற்று அதிகமாக இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகிறது. அவர்கள் மாநகராட்சி உதவி எண்களைத் தொடர்பு கொண்டிருந்தால், உடனடியாக நாங்கள் அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்திருப்போம்” என்றார்.
Coronavirus is increasing day by day across Coimbatore. Corona, which is reaching new heights daily, is also causing sporadic problems in the Coimbatore metropolitan area. Importantly, there ha

Category

🗞
News

Recommended