• 4 years ago
Reporter - எஸ்.மகேஷ்
சென்னை தி.நகரில் உள்ள நகைக்கடையில் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளிப் பொருள்களைத் திருடிய கொள்ளையர்களில் ஒருவரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை தி.நகர், மூசா தெருவில் மொத்தமாகத் தங்க நகைகளை வியாபாரம் செய்யும் ஜுவல்லரி இருக்கிறது. குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஜூவல்லரியை ராஜேந்திரகுமார், தருண், பரிஸ் ஆகியோர் நடத்திவருகின்றனர். 20-ம் தேதி இரவு ஜூவல்லரியைப் பூட்டிவிட்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றனர். பின்னர், 21-ம் தேதி காலையில் கடையைத் திறக்க ஊழியர்களும், கடையின் உரிமையாளர்களும் வந்தபோது கிரில் கேட் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே இருந்த தங்க நகைகள், தங்கக்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போயிருந்தன.

Category

🗞
News

Recommended