• 4 years ago
Reporter - செ.சல்மான் பாரிஸ்
Camera - என்.ஜி.மணிகண்டன்
மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் பாதையில் இருக்கிறது விளாச்சேரி கிராமம். அங்குள்ள எல்லா வீடுகளின் வாசல்களிலும் கலர் கலரான கொலு பொம்மைகள் விற்பனைக்காக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. மற்றொரு புறம் பொம்மைகளை மோல்டிலிருந்து எடுப்பது, பெயின்ட் செய்வது, விற்பனைக்காக பேப்பர் மற்றும் வைக்கோல்களில் சுற்றுவது போன்ற பணிகள் தீவிரமாக நடக்கின்றன. வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்திருக்கும் வியாபாரிகள் மொத்த விலைக்கு பொம்மைகளை வாங்கி லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர். விளாச்சேரியில் மூன்று தலைமுறைகளாக கொலு பொம்மை தயாரிப்பில் இருக்கும் சாந்தி அம்மாவிடம் பேசினோம்.

Category

🗞
News

Recommended