சூதாட்டத்துக்கு அடிமையாகி, தன்னிடமிருந்த சேமிப்புப் பணம் முழுவதையும் இழந்த அவர், உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் ரூ.30 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கியிருக்கிறார். இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர், தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன்னர் தனது மனைவியின் வாட்ஸ்அப் எண்ணுக்கு உருக்கமான ஆடியோ ஒன்ரை அனுப்பியிருக்கிறார். அந்த ஆடியோவில், ``என்னை மன்னிச்சிடு மதி. என்னால ஒண்ணும் பண்ண முடியலை மதி. தூங்காம கண்ணெல்லாம் மங்கலாத் தெரியுது. உடம்பெல்லாம் வீக் ஆகிடுச்சு மதி. நான் ஒரு ரூபா ரெண்டு ரூபா விடலை மதி. கணக்குப் பாத்தா 30 லட்ச ரூபாய்க்கு மேல விட்டிருக்கேன். தப்புதான். போதை மாதிரி விளையாடிக்கிட்டே இருந்துட்டேன். ஒரு நாளைக்கு ரூ.50,000 ஜெயிச்சா, மத்த மூணு நாள்ல நம்மகிட்ட இருந்து ரெண்டு லட்ச ரூபா வெளியில போயிடுது. #rummy #onlinerummy
Category
🗞
News