• 5 years ago
Reporter - எஸ்.மகேஷ்

‘உன்னோட அந்தரங்க போட்டோஸ், வீடியோஸ்லாம் என்கிட்ட இருக்கு. இனிமே நான் சொல்றதத்தான் நீ கேக்கணும்...” என்று பெண் இன்ஜினீயர் ஒருவரை மிரட்டி, தன்னுடைய பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தி வந்திருக்கிறான் அவரிடமே பணிபுரிந்த ஒரு பட்டதாரி இளைஞன். இந்த விஷயத்தில் ரௌடிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் எனப் பலரும் கட்டப் பஞ்சாயத்து பார்ட்டிகளாக நுழைந்து பணம் கறக்கப் பார்க்க, பதறிப்போயிருக்கிறது அந்தப் பெண் இன்ஜினீயரின் குடும்பம். உச்சகட்டமாக, ‘‘உன் மனைவியைத் துரத்திவிடு... நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்!’’ என்று அந்தப் பெண்ணின் கணவரை அரசியல் பிரமுகர் ஒருவர் மிரட்டும் அளவுக்கு பிரச்னை விஸ்வரூபமெடுக்க, விவகாரம் இப்போது சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையப் படியேறியிருக்கிறது.

Category

🗞
News

Recommended