• 4 years ago
Reporter - க ர பிரசன்ன அரவிந்த்

#KamalaHarris #USPresidentElection #Election #VicePresident

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.இதையடுத்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபராக போட்டியிடுகிறார்.இவருக்கு அடுத்த பதவியான துணை அதிபர் பதவிக்கு,ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸை ஜோ பிடன் தேர்வு செய்துள்ளார்.இதனால் தேசிய கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் முதல் கருப்பின பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் கமலா ஹாரிஸ் .இதோடு துணை அதிபர் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி ஏன்ற பெருமையையும் பெறுகிறார்.கமலா ஹாரிஸ் துணை அதிபராக பரிந்துரைக்கப்பட்டது அமெரிக்க தேர்தலில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.கடந்த ஆண்டு கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டு, நிதி நெருக்கடி காரணமாக பின்னர் விலகிக் கொண்டார்.அப்போது ஜூன் மாதம் நடந்த ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான விவாதத்தில் ஜோ பிடனை கடுமையாக சாடியிருந்தார் கமலா ஹாரிஸ்.இதனால் ஜோ பிடனின் இந்த முடிவு அரசியல் விமர்சகர்களிடையே ஆச்சரியத்தையே ஏற்படுத்தியுள்ளது.இதோடு கமலா ஹாரிஸ் துணை அதிபராக பரிந்துரைக்கப்பட்டதை இந்தியர்கள் பலர் ஆமோதித்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதே ஆகும்.இதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள அவரின் குடும்ப வரலாறை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

Category

🗞
News

Recommended