• 4 years ago
போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின்போது ரியாவும் அவரின் சகோதரர் ஷோவிக்கும், போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புடைய சில பிரபலங்களின் பெயரைப் பட்டியலிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சுஷாந்த் சிங் மரண வழக்கு கடந்த சில தினங்களாகப் பல திருப்பங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. `சுஷாந்த் தற்கொலைக்கு அவரின் தோழி ரியாதான் காரணம்’ என்று குற்றம்சாட்டினார் சுஷாந்தின் தந்தை கிருஷ்ணகுமார் சிங். தனது மகனின் வங்கிக் கணக்கு விவரங்களை ரியா நிர்வகித்து, ஏராளமான நிதியை மாற்றிக்கொண்டதாக ரியா உள்ளிட்ட அவரின் குடும்பத்தார்மீது பீகார் மாநிலம், பாட்னா காவல் நிலையத்தில் புகாரளித்தார் சுஷாந்தின் தந்தை. இந்தப் புகாரின் அடிப்படையில் ரியா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து சுஷாந்த் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ரியா மீது பணப் பரிவர்த்தனை தொடர்பான புகார்கள் எழுந்ததை அடுத்து அமலாக்கத்துறை ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்களை ஆய்வு செய்தது. அப்போது ரியாவுக்குப் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் ரியா மீது வழக்கு பதிவு செய்தனர்.
#sushantsingh #sushantsinghcase #reha #rehaaressted

Category

🗞
News

Recommended