• 4 years ago
Reporter - மா.அருந்ததி

சரவணன் மீனாட்சி’ நெடுந்தொடரில் ‘மைனா’ என்ற கேரக்டரின் வழியே அனைவரின் மனத்தையும் கட்டிப்போட்டவர் நந்தினி. ரசிகர்களால் மைனா நந்தினி என்று அழைக்கப்பட்ட இவரின் முதல் திருமணம் கசப்பில் முடிந்தாலும், சக நடிகரான யோகேஸ்வரனுடனான இரண்டாம் திருமணம் இவரின் வாழ்வில் வசந்தத்தைக் கொண்டுவந்தது. சமீபத்தில் இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து மைனா நந்தினி தன் கர்ப்பகாலத்தில் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் இணையத்தில் வைரலானது. வயிற்றில் குழந்தையுடன் வெள்ளை நிற உடையில் இருக்கும் மைனாவை மெட்டர்னிடி போட்டோஷூட் எடுத்த போட்டோகிராபர்கள் நித்யா - துர்கேஷ்நந்தி. #baby #babyphotography #viral

Category

🗞
News

Recommended