மலரும் நினைவினையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

  • 5 years ago
#MinisterJayakumar #AIADMK #Election

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் இன்று முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அதிமுக அரசின் செய்தி தொடர்பாளர் போல் ஒவ்வொரு விஷயங்களும் ஜெயக்குமார் தான் பதில் அளித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்த காலத்திலேயே தேர்தலில் வித்தியாசமாக சிந்தித்து நோட்டீஸ் அடித்து அசரடித்துள்ளார். தனது மலரும் நினைவினையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் 1991ம்ஆண்டு ராயபுரம் தொகுதியில் முதல்முதலாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 2001ம்ஆண்டு , 2006ம் ஆண்டு. 2011ம் ஆண்டு, 2016ம் ஆண்டும் ராயபுரம் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.

minister jayakumar sharing old memory, contesting for students union Gen.secretary election in chennai thiyagarya college 1977-78