செய்முறை ராஜ்கிரா பூரி ரெசிபி | ராஜ்கிரா பூரி ரெசிபி | Boldsky

  • 6 years ago
நவராத்திரி விரதம் என்றாலே எல்லாரும் விரதம் இருந்து கடவுளை வழிபடுவது வழக்கம். மேலும் இந்த மாதிரியான நேரங்களில் நிறைய உணவு வகைகளை வீட்டில் செய்து எல்லாருக்கும் கொடுத்து மகிழவும் செய்வோம். ஒரு நீண்ட விரதம் இருக்க கண்டிப்பாக ஊட்டச்சத்து மிக்க ரெசிபி நம்மளுக்கு தேவை. அது தான் இந்த ராஜ்கிரா பூரி ரெசிபி. உங்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பதோடு உங்கள் வயிறையும் மனதையுமே சேர்த்து நிரப்பி விடும். ராஜ்கிரா பூரி என்பது அப்படியே ஸ்பெஷல் ராஜ்கிரா மாவை பிசைந்து அதனுடன் உருளைக்கிழங்கை சேர்த்து செய்யும் ருசியான பூரி யாகும். அதன் மென்மையான அமைப்பும், டேஸ்ட் டும் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். கலோரி குறைந்த உணவு என்பதால் டயட் பாலோ செய்பவர்கள் கூட எடுத்து கொண்டு மகிழலாம்.

Recommended