பீட்ரூட் ஃபேஸ் பேக் யாரெல்லாம் அவசியம் போடணும் தெரியுமா? | boldsky

  • 6 years ago
இதுவரை பீட்ரூட் பற்றிய மருத்துவ குறிப்புகள்,அதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று தெரிந்து வைத்திருப்பீர்கள். இப்போது பீட்ரூட் முகத்தில் தடவுவதால் என்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.
இதனை தயாரிக்க தேவையான பொருட்கள் பீட்ரூட் ஜூஸ்,தயிர்,கடலை மாவு, மற்றும் எலுமிச்சை சாறு.இவை எல்லாவற்றையும் ஒன்றாக பேஸ்ட் பதத்தில் கலந்து முகத்தில் தடவுங்கள். முன்னதாக குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி சுத்தமான டவலில் துடைத்துக் கொள்ளுங்கள்.கண்கள் மற்றும் வாயைத் தவிர முகம் முழுவதும் இதனை தடவுவதால் முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளியேறும் அதோடு சரும சுருக்கங்களை போக்கவும் உதவிடும். முகத்திற்கு தடவியதைப் போலவே கழுத்துக்கும் தடவுங்கள். அப்போது தான் கழுத்தும் முகமும் ஒரே நிறத்தில் தெரியும்.இதனை நீங்கள் வாரம் ஒரு முறை செய்திடலாம்.