ரேகா மகள் அனுஷா நடிக்க வருகிறாரா?- வீடியோ

  • 6 years ago
நடிகை ரேகாவின் மகள் அனுஷா தாய் வழியில் நடிக்க வரப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து ரேகா விளக்கம் அளித்துள்ளார். கடலோரக் கவிதைகள், புன்னகை மன்னன் என்று ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரேகா. தற்போது அம்மா கதாபத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரேகாவின் மகள் அனுஷா நடிக்க வரப் போவதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து ரேகா அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார். என் மகள் உயர்கல்வி படிப்பதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும், சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வமோ, ஆசையோ அவருக்குத் துளியும் இல்லை என்பதனையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார் ரேகா.

Actress Rekha has released a statement about her daughter Anusha following her in career. She rubbished the rumours that Anusha is getting ready to enter film industry.

Recommended