• 7 years ago
பொங்கல் ரிலீஸ் படங்களுக்குப் பிறகு, பெரிய படங்கள் எதுவும் வெளிவராமல் தமிழ் சினிமா டல்லடிக்கத் தொடங்கியிருக்கிறது. நாளை மறுநாள் வரும் 26ம் தேதியில் 'நிமிர்', 'மன்னர் வகையறா' ஆகிய நேரடித் தமிழ்ப் படங்களும், அனுஷ்காவின் 'பாகமதி' டப்பிங் படமும் வெளியாக உள்ளது. ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', விஷாலின் 'இரும்புத்திரை' ஆகிய படங்கள் தள்ளிப்போயிருப்பது தான் ஜனவரி மாதத்தை பரபரப்பில்லாமல் கடக்க வைத்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் பொங்கல் வெளியீடுகள் என்றாலே திரையுலகத்தில் ஒரு பரபரப்பிருக்கும். அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் அப்போது வெளியாகும் படங்கள் பெரிய வசூலைப் பெற வாய்ப்புகள் அதிகம். இந்த வருடப் பொங்கலுக்கு மூன்று படங்கள்தான். விஷாலின் 'இரும்புத்திரை', ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' ஆகிய படங்கள் தள்ளிப் போயிருக்கின்றன. இதனால், இந்த ஜனவரி மாதத்தை பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி எந்த வெற்றியும் இல்லாமல் கடக்கப்போகிறது தமிழ் சினிமா.

On January 26, 'Nimir' and 'Mannar vagaiyara' and Anushka's 'Bhaagamathie' will be released. Deepika Padukone's 'Padmaavat' will be released tomorrow. Vishal's 'Irumbuthirai' and Jayam Ravi's 'Tik Tik Tik' have been postponed. Thus, Tamil cinema is going to cross without any big success in this January.

Recommended