மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையின்பேரில், இறந்துபோனவர்கள் சடலத்தை பதப்படுத்தி வைக்கும் கடும்குளிர் (cryogenics) டெக்னாலஜி மீது உலகில் பலரின் கவனமும் பதியத்தொடங்கியுள்ளது. இதுவரை உலகில் சுமார் 350 பேரின் இறந்த உடல்கள் இவ்வாறான தொழில்நுட்பத்தின்கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள கிரையோனிக்ஸ் என்ற இன்ஸ்ட்டிடியூட் இந்த வகை பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது.
கிரையோனிக்ஸ் அமைப்பின் தலைவர் டென்னிஸ் கோவல்ஸ்கி இதுபற்றி கூறுகையில், அடுத்த 10 வருடங்களுக்குள் விஞ்ஞானிகள் நாங்கள் பதப்படுத்தி வைத்துள்ள உடல்களுக்கு உயிர் கொடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கிறார். 49 வயதாகும், கோவல்ஸ்கி 'டெய்லி ஸ்டார்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "சிபிஆர் தொழில்நுட்பம் பற்றி 100 வருடங்கள் முன்பு யாரும் நம்பியிருக்கவே மாட்டார்கள். ஆனால் இன்று அது நடைமுறையில் உள்ளது. அதேபோலத்தான், 100 வருடங்களுக்குள் கண்டிப்பாக, உடல்களுக்கு மீண்டும் முழுமையாக உயிர் கொடுக்கும் அறிவியல் வரும்" என்கிறார் ஆணித்தரமாக.
Human corpses frozen by cryogenics could be brought back to life in the next decade, an expert has claimed.

Category
🗞
News