Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/30/2018

தண்ணீர்... தண்ணீர்.. உலக நாடுகளை மிகப் பெரிய அளவில் அச்சுறுத்த தொடங்கிவிட்டது.. தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, சோமாலியா, சிரியாவைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான், இந்தியா என உலகின் பல நாடுகள் தண்ணீர் பஞ்சம் எனும் பேராபத்தில் சிக்கிக் கொண்டுள்ளன. தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் ரேசன் முறையில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் தண்ணீரே இல்லாத வறண்ட பூமியாகப் போகிறது கேப்டவுன். உலகிலேயே தண்ணீரே இல்லாத மிகப் பெரிய நகரம் என்ற அவலத்தை சுமக்கப் போகிறது கேப்டவுன். இதனால் தண்ணீரை பயன்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்ற நிலைமைதான் நைஜீரியா, சோமாலியா, சிரியாவிலும். இஸ்ரேலும் கூட தண்ணீர் பஞ்சத்தை எப்படி எதிர்கொள்வது என்பதில் தீவிரமாக இருக்கிறது.
ஈரானிலும் தண்ணீர் பற்றாக்குறை தலைகாட்டத் தொடங்கிவிட்டது. இந்தியாவின் முன்னோடி மாநிலம், வளர்ச்சி மாநிலம் என பில்டப் செய்யப்பட்ட குஜராத்தை காவு வாங்கப் போகிறது தண்ணீர் பஞ்சம்.

CREDITS:
The world is facing a severe water crisis due to the drought.
Description: https://www.youtube.com/c/NCMEpicMusic
Inspiration:
Composed: By Ender Güney

https://twitter.com/freemusiceg16
https://www.facebook.com/NCMmusic16/
soundcloud.com/ncm-free-music

Category

🗞
News

Recommended