• 7 years ago
சென்னை கும்மிடிப்பூண்டியில் தொழில்போட்டியில் முன்னாள் முதலாளியை 6 இளைஞர்கள் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, மபொசி நகரைச் சேர்ந்த யூசப் என்பவரின் மகன் ஷாஜஹான். 27 வயதான இவர், எலக்ட்ரானிக் பொருட்களை மொத்தமாக வாங்கி, புறநகர் மின்சார ரயிலில் விற்பனை செய்துவந்துள்ளார். இவரிடம் கும்மிடிப்பூண்டி திருக்குளம் தெருவைச் சேர்ந்த விமல் என்ற 20 வயது இளைஞர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், ஷாஜஹானிடம் இருந்து விலகியுள்ளார் விமல்.

பின்னர் ஷாஜஹானைப் போல் எலக்ட்ரானிக் பொருட்களை மொத்தமாக வாங்கி புறநகர் மின்சார ரயிலில் விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாஜஹான் தன்தொழிலை பாதிக்கும் வகையில் தொழில் செய்யக்கூடாது என விமலை எச்சத்துள்ளார்.

இதனால் கடுப்பான விமல், ஷாஜஹானை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது நண்பர்களுடன் ஆலோசித்த அவர் ஷாஜஹானை போட்டு தள்ள முடிவு செய்தார்.

Six youths killed their former employer in the business competition. The youths buried his body near railway track. Then they surrender to the VAO.

Category

🗞
News

Recommended