ரஹ்மான் ஸ்பெஷல்!- வீடியோ

  • 6 years ago
'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மானின் 51-வது பிறந்தநாள் இன்று. 'ரோஜா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஹ்மான் 25 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார். 1992-ம் ஆண்டு 'ரோஜா' படத்தின் இசை மூலம் ரசிகர்களைக் கட்டிப்போட்ட ரஹ்மான் ஒவ்வொரு நாளும் தனது இசையின் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திக் கொண்டேதான் செல்கிறார். இளையராஜாவுக்குப் பிறகான இசையின் அடுத்த தலைமுறையாகக் கொண்டாடப்படும் ரஹ்மானின் பிறந்த நாளான இன்று ட்விட்டரில் ரசிகர்கள் பகிர்ந்திருக்கும் மோஸ்ட் ஃபேவரிட் இசைத் துணுக்குகளைக் கேட்டுக் களிப்புறலாம்.

'இந்தியன்' படத்தில் கமல்ஹாசன், சுகன்யா சந்திப்பின்போது ஒலிக்கும் பின்னணி இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் மிரட்டி இருப்பார். ரஹ்மானின் இசையும், குரலும் சேர்ந்து அழகான உணர்வை உருவாக்கியிருக்கும்.
அரவிந்த்சாமி, மதுபாலா வரும் காட்சியின்போது ஒலிக்கும் பின்னணி இசை மாஸ்டர் பீஸ். ரஹ்மான் சினிமாவில் அறிமுகமான முதல் படமான 'ரோஜா' அவரது புகழை என்றென்றும் தாங்கி நிற்கும்.

'அலைபாயுதே' படத்தில் இடம்பெற்ற 'சினேகிதனே' பாடல் பலருக்கும் ஃபேவரிட். ரஹ்மான் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் தவறாமல் இடம்பிடிக்கும் இந்தப் பாடல் மெலடி வரிசையில் டாப் ஹிட்.

'Music storm' AR Rahman's 51st birthday today. Rahman, who debuted in Tamil cinema with 'Roja', has passed 25 years. Fans sharing the most favorite tunes of AR Rahman on Twitter.

Category

🎵
Music

Recommended