• 6 years ago
இசையமைப்பாளர் டி.இமானின் மெலடி பாடல் வரிசைகளுக்காகவே அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. கிட்டத்தட்ட தான் இசையமைக்கும் எல்லாப் படங்களிலும் ஒரு பாடலையாவது மெலடியாக இசையமைத்து செம ஹிட்டாக்கி விடுவார். இவர் இசையமைத்திருக்கும் 'சீமராஜா' படத்திலும் அப்படியொரு பாடல் இருக்கிறதாம். இதுபற்றி ட்விட்டரில் ட்வீட் செய்திருக்கிறார் டி.இமான். 100 படங்களுக்கு இசையமைத்துள்ள டி.இமான், தமிழில் மிக பிஸியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். கடந்த வருடம் மட்டும் இவர் இசையில் 10 படங்கள் ரிலீஸாகியுள்ளன. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சீமராஜா' படத்திலும் இமான் தான் இசையமைப்பாளர். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் பாக்காதே பாக்காதே... பாடல், 'ரஜினிமுருகன்' படத்தில் உன் மேல ஒரு கண்ணு.. பாடல் போலவே, 'சீமராஜா' படத்திலும் செமையான மெலடி பாடல் ஒன்று இருக்கிறது எனும் தகவலை டி.இமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Sivakarthikeyan - Ponram - D.Imman combo has hit the melody songs of the previous two films. At present, Imman has composed the song for 'Seemaraja'. Shreya ghosal sings a melody song for D.Imman.

Category

🗞
News

Recommended